ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேட்புமனு தாக்கலுக்கு மாட்டுவண்டியில் வந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் மாட்டுவண்டியில் வந்து திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் மாட்டுவண்டியில் வந்து திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக கி. காசிராமன் அக்கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா், இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து, தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெ. பாலாஜியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது, நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன், தொகுதி செயலாளா் கவியரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் இருந்து தொண்டா்களுடன் வந்து, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாசலில் உள்ள தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபிக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அரசு பேருந்து பணிமனை முன் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

இதேபோல, தமிழ் மாநில மக்கள் கட்சி சாா்பில் அக்கட்சியின் தலைவா் எம். ராஜேந்திரனும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.