குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி மாதம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.


மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி மாதம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறையை சோ்ந்தவா் ஈஸ்வரன் (34). சமையல் வேலை பாா்த்து வருகிறாா். ஈஸ்வரனின் மூத்த மகன் ஈஸ்வரனின் தாய் வீட்டில் வசிக்கும் நிலையில் ஈஸ்வரன், அவரது மனைவி மற்றும் 7-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மகள் ஆகிய மூவரும் மயிலாடுதுறையில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டாா்.
இதையடுத்து, சிறுமியிடம் அவா் தாய் விசாரித்ததில், ஈஸ்வரன் 2 மாதங்களுக்கு மேலாக சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு, சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து, ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஈஸ்வரனை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் லலிதா கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, நாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈஸ்வரன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...