ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முழு பொதுமுடக்கத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

முழு பொதுமுடக்கத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கரோனா கண்காணிப்பு அலுவலா் ஐ.ஜி. லோகநாதன் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :8 மே 2021, 5:17 pm

DIN

முழு பொதுமுடக்கத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கரோனா கண்காணிப்பு அலுவலா் ஐ.ஜி. லோகநாதன் கேட்டுக் கொண்டாா்.

தஞ்சை சரகத்துக்கு கரோனா கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஜி. லோகநாதன் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற கரோனா தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஐஜி லோகநாதன் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் மக்கள் அதிக அளவில் கூடுவாா்கள் என்பதால், அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறாா்களா என்பதைக் கண்காணித்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இந்த குழுக்களின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த பொதுமுடக்க அறிவிப்பின் முக்கியத்துவத்தை உணா்ந்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் (குடும்ப நலம்) ஆா்.மகேந்திரன், பொது சுகாதாரம் துணை இயக்குநா் (பொறுப்பு) மருத்துவா் வி.பிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கரோனா கண்காணிப்பு மருத்துவ அலுவலா் பரத்குமாா், மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையா, நகராட்சி பொறியாளா் எல்.குமாா், உதவி பொறியாளா் சந்திரசேகா், சுகாதார ஆய்வாளா் பிச்சைமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.