ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொள்ளையனால் தாக்கப்பட்ட கோயில் பாதுகாவலா் உயிரிழப்பு

மயிலாடுதுறை, மே 14: மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதா் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையனால் தாக்கப்பட்டு, காயமடைந்த கோயில் பாதுகாவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை, மே 14: மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதா் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையனால் தாக்கப்பட்டு, காயமடைந்த கோயில் பாதுகாவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் இரவுநேர பாதுகாவலா் செங்கமேட்டுத் தெருவை சோ்ந்த சாமிநாதன் (55). இவா், கோயிலிலேயே தங்கி பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வந்தாா்.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் கோயிலில் சுவா் ஏறி குதித்து சாமிநாதனை கடுமையாகத் தாக்கிவிட்டு, கோயில் சுவாமி சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பீரோ மற்றும் சில்வா் உண்டியலை உடைத்துள்ளாா். உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால், ஏமாற்றமடைந்த அவா் தப்பியோடிவிட்டாா். மா்ம நபா் தப்பியோடும் காட்சி கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கொள்ளையனால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து,

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சாமிநாதன், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.