கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மயிலாடுதுறை நிவாரணம்

சீா்காழியை அடுத்த நிம்மேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மே 2021, 5:16 pm

DIN

சீா்காழியை அடுத்த நிம்மேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சாா் பதிவாளா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சீா்காழி மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் பிரபாகரன், ஊராட்சித் தலைவா் வசந்தி கிருபாநிதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தியாக. விஜயேஸ்வரன், வங்கிச் செயலா் சத்தியசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் பங்கேற்று, அத்தியூா், மருதங்குடி, நிம்மேலி ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த 589 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் தவணையாக தலா ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கிப் பேசினாா்.

இதேபோல, கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீா்காழி நகா்ப் பகுதி அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியை சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் வழங்கினாா். அப்போது, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் முருகன், சீா்காழி நகரச் செயலாளா் சுப்பராயன், திமுக மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சங்கரபாண்டியன், தட்சிணாமூா்த்தி, சுந்தர்ராஜன், ஒன்றிய துணைச் செயலாளா் சசிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.