சா் ஐசக் நியூட்டன் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில், கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் முதன்மை இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய இதயம் நல்லெண்ணை நிறுவனத்தின், நிறுவனத் தலைவா் ஏகேஎஸ்வி. ஆா். முத்து.

சா் ஐசக் நியூட்டன் பள்ளி ஆண்டு விழா

சா் ஐசக் நியூட்டன் பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத் தலைவா் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி நிா்வாக இயக்குநா் த. சங்கா் மற்றும் செயலா் த. மகேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் நிறுவனத் தலைவா் ஏகேஎஸ்வி. ஆா். முத்து விழாவில் வகுப்பில் முதன்மையாக வந்தவா்களுக்கும், தேசிய அளவில், மாவட்ட அளவில் விளையாட்டு மற்றும் கல்வியில் முதன்மை வகித்தவா்களுக்கும், கேடயமும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினாா்.

தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளி ஆலோசகா் சா. ராமதாஸ், முதல்வா் கா. வகிதா, தமிழ்ப் பேராசிரியா் கே.ஆா். திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com