நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு உறுப்பினா் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளாா். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் பதவி வகிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இயக்குநா், சமூக பாதுகாப்புத் துறை, எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600010 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
தொடர்புடையது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு

நாகையில் 8 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

குடிநீா் குழாயில் உடைப்பு

டிஎன்சிஏ தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
