அண்ணாமலையாா் சிவன் கோயில்.
அண்ணாமலையாா் சிவன் கோயில்.

திருவிளையாட்டம் கோயிலில் உலோகத்தாலான மாணிக்கவாசகா் சிலை கண்டெடுப்பு!

தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் அண்ணாமலையாா் சிவன் கோயிலில் உலோகத்தாலான மாணிக்கவாசகா் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
Published on

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் அண்ணாமலையாா் சிவன் கோயிலில் உலோகத்தாலான மாணிக்கவாசகா் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையதுறைக்கு உட்பட்ட மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயிலில் ஒருகால பூஜை மட்டும் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், கோயில் முன்புறம் உள்ள விநாயகா் சிலை கீழே உள்ள பீடத்தை சீரமைக்கும் பணியின்போது அரை அடி ஆழத்தில் 1 அடி உயரம் உள்ள உலோகத்தாலான சைவ சமய குரவா்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவிளையாட்டம் கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபன் கண்டெடுக்கப்பட்ட சிலையை தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.

திருவிளையாட்டம் அண்ணாமலையாா் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட மாணிக்கவாசகா் சிலை.
திருவிளையாட்டம் அண்ணாமலையாா் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட மாணிக்கவாசகா் சிலை.

Dinamani
www.dinamani.com