கட்டுப்பாடற்ற ஒலி எழுப்புதல் தொடர்பாக விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கட்டுப்பாடற்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள், பட்டாசுகள், இதர கருவிகள் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒலிப்பான்கள், வெடி வெடிப்பது என்பதை காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செய்யவேண்டும்.
பண்டிகைக் கொண்டாட்டங்கள், பொதுக் கொண்டாட்டம், பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் மகிழ்ச்சிகரமாக அமைய உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் அதிக ஒலி மாசு உருவாக்கக்கூடிய ஒலிப்பான்கள், பட்டாசுகளால் தற்காலிக செவிட்டுத் தன்மையும், தொடர் ஓசையானது நிரந்த செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடியது.
இரவு 10 முதல் காலை 6 மணிவரை அதிக ஒலி எழுப்பக்கூடியவைகளை பயன்படுத்த வேண்டாம். குடியிருப்புப் பகுதிகளில் ஒலி எழுப்பக்கூடிய கட்டுமான இயந்திரங்களை, இதே நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. ஒலி அளவானது 125 டெசிபல் அல்லது 145 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது.
குறிப்பாக மருத்துவமனைகள், நீதிமன்ற வளாகங்கள், கல்விக்கூடம் இருக்குமிடங்களில் 100 மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உச்சநீதிமன்ற ஆணையின்படியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


