ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஸ்ரீ சுவேதா விநாயகர், ஹரிஹர புத்திர ஐயனார் கோயில் குடமுழுக்கு விழா

திருநள்ளாறு அருகே ஸ்ரீ சுவேதா விநாயகர், ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திருநள்ளாறு அருகே ஸ்ரீ சுவேதா விநாயகர், ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருநள்ளாறு கொம்யூன், செருமாவிலங்கை கிராமத்தில், புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயில் தேவஸ்தானத்துக்குள்பட்டதாக,  ஸ்ரீ சுவேதா விநாயகர், ஸ்ரீ புரண புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார், ஸ்ரீ செல்லியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதையொட்டி, அறங்காவல் வாரியத்தினரும், கிராம வாசிகளும் திருப்பணி மேற்கொண்டு மீண்டும் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்தனர்.
புதுச்சேரி அரசின் நிதி பங்களிப்பு மற்றும் நன்கொடைகள் மூலம் கடந்த ஓராண்டாக இக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் அருகே அமைக்கப்பட்ட யாகசாலை  மையத்தில் புதன்கிழமை மாலை முதல் கால பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாஹுதி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு 2-ஆம் கால  பூஜையாக மகா பூர்ணாஹுதி நடைபெற்று, கடம் புறப்பாடு செய்யப்பட்டது. காலை 8 மணி முதல் 9.20 மணி வரை மூன்று கோயில்களின் விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் அ.மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல், காரைக்கால் நகரப் பகுதி கும்சகட்டளை வள்ளியம்மை நகரில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னியம்மன், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மதுரை வீரன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2-ஆம் கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை 8 மணிக்கு நிறைவடைந்ததும், 8.30 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்றது. 
இதில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார்கள், கிராம வாசிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.