காரைக்கால் ஸ்ரீ நித்தீசுவர சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் ஸ்ரீ நித்தியகல்யாணி சமேத ஸ்ரீ நித்தீசுவர சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்று விளங்கும் இக்கோயிலில், ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ கால பைரவர் சன்னிதி, ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சன்னிதி உள்ளன. தமிழ் மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி, கால பைரவருக்கு சிறப்புக்குரியதாகும். இதையொட்டி, புதன்கிழமை இரவு ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. அஷ்டமி பூஜையையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த வசனத்துக்கான தேசிய விருதை வென்றார் லக்கி பாஸ்கர் பட இயக்குநர்!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் ரந்தீப் ஹூடா!

இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan


