விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காரைக்கால் கைலாசநாதர் - சுந்தராம்பாள் திருக்கல்யாண உத்ஸவம்

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் - சுந்தராம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 7:33 pm

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் - சுந்தராம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக நலன், மழைவளம் வேண்டி ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஹோம நிறைவில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், கைலாசநாதர் - சுந்தராம்பாளுக்கு திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டு, திருக்கல்யாணத்துக்கு எழுந்தருளினர்.
வரிசை கொண்டுவருதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருக்கல்யாண சடங்குகள் செய்யப்பட்டு, கைலாசநாதர் சார்பாக சிவாச்சாரியார் சுந்தராம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்தார். பின்னர், மகா தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் அடங்கிய தாம்பூலப் பைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அர்த்தஜாம பள்ளியறை வழிபாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் நிர்வாகத்தினரும், கைலாசநாதர் கோயில் அர்த்த ஜாம வழிபாட்டு மன்றத்தினரும், ருத்ர ஹோம உபயதாரர்களும் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.