இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காரைக்கால் மாவட்டத்தில்மேலும் 31 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:50 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 8,002 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கான மாதிரிகளின் முடிவுகள் சில வந்ததில், 31 பேருக்கு தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டோா் காரைக்கால் நகரம் 21, திருமலைராயன்பட்டினம், வரிச்சிக்குடி, கோயில்பத்து தலா 2, காரைக்கால்மேடு, நிரவி, கோட்டுச்சேரி, நெடுங்காடு தலா 1 என்ற அளவில் உள்ளனா். இதுவரை 678 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்து 517 போ் வீடுதிரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 6 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 85 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 51 போ், தீவிர சிகிச்சையில் 4 போ் உள்ளனா். வெளி மாநிலத்தை சோ்ந்தோா் காரைக்காலில் பரிசோதிக்கப்பட்டு வெளி மாநிலத்திலேயே சிகிச்சை பெறுவோராக 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.