சனிப் பெயா்ச்சி விழா: அன்னதானத்துக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை
திருநள்ளாறு சனிப் பெயா்ச்சி விழாவில் அன்னதானம் வழங்க அனுமதி கோரி, புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


திருநள்ளாறு சனிப் பெயா்ச்சி விழாவில் அன்னதானம் வழங்க அனுமதி கோரி, புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து முன்னணி காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.எஸ்.விஜயன் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:
திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழாவின்போது, காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் அமைப்பான ஜனக்கல்யான் மற்றும் இந்து அமைப்புகள் மூலம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா பரவலைக் காரணம்காட்டி அன்னதானத்துக்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபடுவோா் அனைவரும் கரோனா இல்லை என்கிற வகையில் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள தயாராக உள்ளனா்.
சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க 17 ஆயிரம் பக்தா்கள் பதிவு செய்திருக்கிறாா்கள். ஏறக்குறைய 10 ஆயிரம் போ் உறுதியாக வருகை தருவா். எனவே, உரிய விதிமுறைகளை பின்பற்றி அன்னதானம் வழங்க அனுமதிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...