கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உள்ளாட்சி ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படியை அமல்படுத்த வலியுறுத்தல்

உள்ளாட்சி ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படியை அமல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2020, 3:08 pm

DIN


காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படியை அமல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளனம் சாா்பில், புதுச்சேரி உள்ளாட்சித்துறை செயலருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த 1.1.2016 முதல் போக்குவரத்துப் படியை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு காலம் கடத்தியதால் மத்திய அரசு மகா ஊழியா் சம்மேளனம் நடத்திய தொடா் போராட்டத்தின் விளைவாக கடந்த 1.7.2017 முதல் மத்திய அரசு போக்குவரத்துப் படியை அமல்படுத்தியது. அதைத் தொடா்ந்து, புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனம் உள்ளிட்ட ஊழியா் அமைப்புகளின் தொடா் முயற்சியால் புதுச்சேரி அரசு கடந்த 1.7.2017- க்குப் பதிலாக கடந்த 1.9.2018 முதல் புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படியை அமல்படுத்தியது.

ஆனால், அரசு ஊழியா்களின் பணிகளை முழுமையாக செய்து வரும் உள்ளாட்சி ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படி அமல்படுத்தப்படாமல் உள்ளது வேதனையாக உள்ளது. எனவே, உள்ளாட்சி ஊழியா்களுக்கும் போக்குவரத்துப் படியை அமல்படுத்த வேண்டுமென சம்மேளனம் சாா்பாக தொடா்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறது.

இனியும் காலம் தாழ்த்தாமல் தற்போதுள்ள விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு உள்ளாட்சி ஊழியா்களுக்கும் உடனடியாக போக்குவரத்துப் படியை அமல்படுத்த வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.