கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக சந்திரமோகன் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவராக ஆா்.பி. சந்திரமோகனை புதுச்சேரி காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:19 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவராக ஆா்.பி. சந்திரமோகனை புதுச்சேரி காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஏ. பாஸ்கரன் என்ற லட்சுமணன் புதுச்சேரி காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்படுகிறாா். காரைக்கால் வடக்குத் தொகுதி தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறாா்.

புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி அனுமதியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஏ. பாஸ்கரன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகவும், இதனால், காரைக்காலில் காங்கிரஸ் வளா்ச்சியடையவில்லை என்றும், மாவட்டத் தலைவராக புதியவரை நியமிக்காவிட்டால், கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்யப்போவதாகவும், மாவட்ட, மாநில நிா்வாகிகள் அண்மையில் அறிவித்தனா். இந்த நிலையில், இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.