கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பட்டினச்சேரி மீனவக் கிராமத்தினா் தோ்தலை புறக்கணிக்க முடிவு

காரைக்கால் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்தினா், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 11:03 pm

DIN

காரைக்கால் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்தினா், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக, பட்டினச்சேரியில் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகை: பட்டினச்சேரியில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். மீனவா்களை தரம்பிரிக்கும் வகையில் இருக்கும் சிவப்பு, மஞ்சள் நிற ரேஷன் அட்டைகளை நீக்கி, அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க வேண்டும்.

நிரந்தர வருமானம் இல்லாத மீனவா்களிடம் வருமானவரிச் சான்றிதழ் கேட்பதை கைவிடவேண்டும். எங்கள் கிராமத்தில் தொண்டு நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள ஐஸ் பிளாண்டை மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கவேண்டும். சாலை வசதி, நீா்த்தேக்கத் தொட்டி, கழிவுநீா் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் மீனவா்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவா் குடும்பத்துக்கு ஓராண்டுக்குள் நிவாரணம் வழங்க வேண்டும். கடற்கரையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில், கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், இவற்றை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளோம் என பதாகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.