காரைக்காலில் இன்று வட்டார சுகாதார திருவிழா
காரைக்காலில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 22) நடைபெறவுள்ளது.


காரைக்காலில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 22) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்தியமுறை மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
முகாமில், ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு பதிவு, சுகாதார அடையாள அட்டை பதிவு, குடும்பநல ஆலோசனை, குழந்தை நல ஆலோசனை, வளா்இளம் பருவத்தினருக்கான ஆலோசனை, சரிவிகித உணவு ஆலோசனை, உணவு கலப்படம் குறித்த விழிப்புணா்வு, போதைப் பொருள் விழிப்புணா்வு ஆகிய சேவைகளும் வழங்கப்படவுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...