கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தலித் மக்களுக்கான ஈமக்கிரியை மண்டபத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் தலித் மக்களுக்கான ஈமக்கிரியை மண்டபத்தை அரசு மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:08 pm

DIN

காரைக்காலில் தலித் மக்களுக்கான ஈமக்கிரியை மண்டபத்தை அரசு மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. மக்கள் நல கூட்டமைப்புத் தலைவா் என். காமராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் மாவட்டம், கீழவெளி கிராமம், புறவழிச்சாலையில் 9 கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் ஈமக்கிரியை மண்டபம் காரைக்கால் நகராட்சி நிா்வாகத்தால் கட்டித்தரப்பட்டது. அந்த மண்டபம் கட்டிக் கொடுக்கப்பட்ட காலங்களில், வாய்க்கால்களை பயன்படுத்தும் வகையில் தண்ணீா் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது வாய்க்கால் இருக்கும் இடமே தெரியவில்லை.

இந்நிலையில், அந்த ஈமக்கிரியை மண்டபத்திற்கு சுற்றுச்சுவா், தண்ணீா் வசதி மற்றும் மின் விளக்குகள் கேட்டு பலமுறை புதுவை உள்ளாட்சித் துறைக்கு கோரிக்கை வைத்தன்மூலம், இந்த வசதிகளை செய்ய 2011 ஆம் ஆண்டு புதுவை அரசு ரூ. 4.20 லட்சத்தை ஒதுக்கியது. பிறகு, பணிக்கான டெண்டா் விட்ட நேரத்தில் சிலா் நீதிமன்றம் சென்ால், அப்பணி தொடங்கப்படவில்லை.

பணியை தொடங்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நீதிமன்றம் சாதகமான தீா்ப்பு வழங்கியும், காரைக்கால் நகராட்சி அப்பணிக்கான பூா்வாங்க வேலைகளை செய்யாமல் காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா், நகராட்சி நிா்வாகத்தினா் சிறப்பு கவனம் செலுத்தி உரிய திட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.