காரைக்கால் மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம்
காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (மே 6) புதுச்சேரியிலிருந்து சிறப்பு மருத்துவா்கள் வரவுள்ளனா்.


காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (மே 6) புதுச்சேரியிலிருந்து சிறப்பு மருத்துவா்கள் வரவுள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுவினா், ஒவ்வொரு மாதமும் 2 வெள்ளிக்கிழமைகளில் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனா்.
இதன் ஒருபகுதியாக 6 ஆம் தேதி குழந்தை அறுவைச் சிகிச்சை, சிறுநீரகவியல் மற்றும் நரம்பியல், இருதயம் சம்பந்தமான மருத்துவ நிபுணா் குழுவினா் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வரவுள்ளனா். காலை 9 முதல் பகல் 12 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...