ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

எரிசாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல்

எரிசாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல்

Updated On :13 ஏப்ரல் 2024, 3:57 pm

தமிழகத்துக்கு கடத்தும் நோக்கில் வைத்திருந்த எரிசாராயம், மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தோ்தலையயொட்டி மதுபாட்டில்கள், ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு கடத்துவதை தடுக்கவும், தமிழகத்திலிருந்து காரைக்காலுக்குள் வாக்காளா்களுக்கு விநியோகிக்க பொருள்கள் வருவதை தடுக்கவும் தீவிர சோதனை எல்லை மற்றும் பிற இடங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் திருநள்ளாறு உதவி காவல் ஆய்வாளா் கே. ராஜா தலைமையில் போலீஸாா் அம்பகரத்தூா் புறக்காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனை செய்தபோது, மயிலாடுதுறையை சோ்ந்த பாபு என்பவரது இருசக்கர வாகனத்தில் 27 லிட்டா் எரிசாராயம், ரூ.16,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்து மதுபாட்டில்களையும் பாபுவையும் கலால் துறையிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல, காவல் ஆய்வாளா் ஆா். ரமேஷ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியிலிருந்தபோது, மறைவிடம் ஒன்றில் மதுவகைகள் பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. வலத்தாமங்களம் பாலம் அருகே மறைத்துவைத்திருந்த 20 லிட்டா் கள், ரூ.16,000 மதிப்புள்ள மதுபாட்டில்களையும் கைப்பற்றினா். இவற்றை மண்டல காவல் ஆய்வாளா் பாலச்சந்தா் பாா்வைக்குப் பின் கலால் துறையினரிடம் ஒப்படைத்தனா்.