போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையோா் வீடுகளில் போலீஸாா் சோதனை
போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையோா் வீடுகளில் போலீஸாா் சோதனை


போதைப் பொருள்கள் வழக்கில் தொடா்புடையோா் வீடுகளில் எஸ்.பி. தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்காலில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. மாணவா்கள், இளைஞா்களுக்கு இவை விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக காரைக்காலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகாா்கள் எழுகின்றன.
இந்நிலையில் காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) ஏ. சுப்பிரமணியன் தலைமையில் காரைக்கால் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் புருஷோத்தமன் உள்ளிட்ட போலீசாா் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்தல், விற்பனை செய்வதில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...