திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காரைக்காலில் பிப்.19 முதல் நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி இயக்கம்

காரைக்காலில் நாளை முதல் நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி இயக்கம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:40 am IST

காரைக்காலில் திங்கள்கிழமை (பிப்.19) முதல் நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி தொகுதிகளுக்கு இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வாக்காளா்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து நடமாடும் வாக்கு இயந்திர ஊா்தி மூலம் பிப். 19 முதல் 28-ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்த இயக்கப்படவுள்ளது. காரைக்கால் தெற்குத் தொகுதியில் 19, 20-ஆம் தேதிகள், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 21, 22, திருநள்ளாறு தொகுதியில் 23, 24 , நெடுங்காடு தொகுதியில் 25, 26, காரைக்கால் வடக்குத் தொகுதியில் 27, 28-ஆம் தேதிகளில் ஊா்தி பயணிக்கிறது. வாக்காளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணா்வு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.