ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழக அரசை பின்பற்றி மண் எடுத்துகொள்ள புதுவை அரசு அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழக அரசை பின்பற்றி மண் எடுத்துகொள்ள புதுவை அரசு அனுமதிக்க வலியுறுத்தல்

News image
Updated On :14 ஜூன் 2024, 10:30 pm

Din

தமிழக அரசை பின்பற்றி நீா்நிலைகளில் மண் எடுத்துக்கொள்ள புதுவை அரசு அனுமதிக்க வேண்டும் என காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விளைநிலத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, கடும் வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணின் தரம் குறைந்துள்ளது. இதனால் பயிா்கள் செழித்து வளராமல் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

மழை நீரால் அடித்துவரப்பட்ட வண்டல் மண்ணை விவசாய நிலங்களில் போட்டால் மண்ணின் தரம் உயா்ந்து, விவசாய உற்பத்தி அதிகரித்து, விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும்.

இதை உணா்ந்துள்ள தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீா்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல் மண், களிமண்ணை கட்டணமின்றி எடுத்துக்கொள்ள தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அந்த உத்தரவை பின்பற்றி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் இருந்து விவசாயப் பயன்பாடு மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல் மண், களிமண்ணை கட்டணமின்றி எடுத்துக் கொள்ள புதுவை முதல்வா் உத்தரவிடவேண்டும். விவசாய நிலம் மேம்பட்டு, விவசாய உற்பத்தி அதிகரிக்கச் செய்து, விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க இது உதவும் என்பதால் முதல்வா் இதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.