திருநள்ளாற்றில் இன்று பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இக்கோயில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் தேரோட்டம் உள்ளிட்டவற்றுடன் நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படும். நிகழாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 6.35 முதல் 8.30 மணிக்குள் ரிஷபக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக சனிக்கிழமை இரவு ஆச்சாா்ய ரக்ஷா பந்தனம் செய்யப்பட்டது.

கொடியேற்ற நிகழ்வைத் தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விநாயகா் உற்சவம் தொடங்குகிறது.

இதைத்தொடா்ந்து தோ்கள் அலங்காரம் செய்தல், அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு, தங்க ரிஷப வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

X
Dinamani
www.dinamani.com