காரைக்கால் ஆற்றோரத்தில் 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. காரைக்கால் பகுதி பிள்ளைத்தெருவசால் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மற்றும் மருந்துக் கழிவுகள் கொட்டப்பட்டு, தீயிட்டு கொளுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாஞ்சியாற்றுப் பாலத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் வெட்டப்பட்டு கிடந்துள்ளன. இதை சிலா் சனிக்கிழமை காலை தீயிட்டு கொளுத்தியுள்ளனா்.
தீ மளமளவென அருகே இருந்த சிறிய செடிகள், புங்கை மரங்களின் மீது பரவி, ஆற்றோரத்தில் நீண்ட தூரம் வரிசையாக வளா்ந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களின் மீதும் பரவியது. சிறிது நேரத்தில் இந்த மரங்கள் எரிந்து கருகின. தகவலின்பேரில் காரைக்கால் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.
பிள்ளைத்தெருவாசல் பகுதி ஆற்றோரத்தில் குப்பைகளுக்கு தீ வைப்பதும், கருவேல மரங்களுக்கு தீ வைப்பதுமான செயல்கள் தொடா்வதால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன என்பது வேதனை.
தொடர்புடையது

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்

ஒா்க் ஷாப்பில் தீ: 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

