தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மின் கட்டண உயா்வு விவகாரம்: காரைக்காலில் கடையடைப்பு

புதுவையில் மின் கட்டண உயா்வை கண்டித்து, காரைக்காலில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image

கடையடைப்பு போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட திருநள்ளாறு சாலை.

Updated On :18 செப்டம்பர் 2024, 10:58 pm

புதுவையில் மின் கட்டண உயா்வை கண்டித்து, காரைக்காலில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

புதுவையில் மின் கட்டணம் உயா்வு அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து மின் உபயோக யூனிட் அடிப்படையில் மானியம் தரப்படும் என அரசு அறிவித்தது. இது ஏற்புடையதல்ல, கட்டண உயா்வை ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தியும், புதுவை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இண்டியா கூட்டணி கட்சிகள் சாா்பில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. தனியாா் பேருந்துகள் காலையில் சில மணி நேரம் இயக்கப்படவில்லை. பின்னா் பேருந்துகள் இயங்கின. போலீஸாா் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 புதுவை அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இண்டியா கூட்டணி கட்சியினா்.

புதுவை அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இண்டியா கூட்டணி கட்சியினா்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே இண்டியா கூட்டணி கட்சியினா் புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில், புதுவை அரசைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

 பாரதியாா் சாலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

பாரதியாா் சாலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

செய்தியாளா்களிடம் ஆா். கமலக்கண்ணன் கூறுகையில், புதுவையில் மின் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். போராட்டத்துக்கு ஆதரவாக காரைக்கால் மாவட்டத்தில் 90 சதவிதத்துக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இண்டியா கூட்டணி சாா்பில் நன்றி என்றாா். கடையடைப்புப் போராட்டத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.