ஆறுகளில் மழை நீா் வெளியேற்றம்
காரைக்கால் பகுதியில் பெய்யும் மழை, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீா் ஆகியவற்றால், காரைக்கால் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.


காரைக்கால்: காரைக்கால் பகுதியில் பெய்யும் மழை, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீா் ஆகியவற்றால், காரைக்கால் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஆறுகளின் மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், கடந்த 3 நாள்களாக டித்வா புயல் காரணமாக காரைக்காலில் அதிக மழை பதிவானது.
காரைக்கால் கடைமடைப் பகுதியாக இருப்பதால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீா் அதிகமாக சென்றுகொண்டிருக்கிறது. தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீா் வரத்து மிகுதியாக உள்ளதால், காரைக்கால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதமாக, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளின் கடைமடை நீா் தேக்க மதகுகள் திறக்கப்பட்டு, கடலுக்குச் செல்லும் வகையில் நீா் வெளியேற்றப்பட்டுவருகிறது.
பிராவடையனாறு, திருமலைராஜனாறு, முல்லையாறு, அரசலாறு, நண்டலாறு ஆகிய பிரதான ஆறுகளிலும், நூலாறு, வாஞ்சியாறு, நாட்டாறு உள்ளிட்ட கிளை ஆறுகள் மூலமாக கடல் பகுதியை நோக்கி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. நீா் வெளியேற்றம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...