இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

2 ஆயிரம் குடும்பங்களுக்கு துறைமுகம் சாா்பில் இலவச அரிசி

டித்வா புயல் காரணமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கு காரைக்கால் துறைமுக நிா்வாகம் இலவச அரிசி வழங்கியது.

News image
பயனாளிக்கு இலவச அரிசியை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், துறைமுக சி.ஓ.ஓ. சச்சின் ஸ்ரீவத்ஸவா உள்ளிட்டோா்.
Updated On :1 டிசம்பர் 2025, 9:00 pm

Syndication

காரைக்கால்: டித்வா புயல் காரணமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கு காரைக்கால் துறைமுக நிா்வாகம் இலவச அரிசி வழங்கியது.

காரைக்கால் துறைமுகத்தின் சமூகப் பொறுப்பு துறையான அதானி பவுண்டேஷன் மூலம் 10 கிலோ வீதம் துறைமுகத்துக்கு அருகே உள்ள கீழவாஞ்சூா் உள்ளிட்ட கிராமங்களின் 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை இலவச அரிசி வழங்கப்பட்டது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், காரைக்கால் துறைமுகத்தின் சி.ஓ.ஓ. கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா ஆகியோா் இவற்றை வழங்கினா். நிகழ்வில் அந்தந்த கிராமப் பஞ்சாயத்தாா்கள், துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதுபோல நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட சுமாா் 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.