போலி இணையதளம்: விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

அரசு உதவித்தொகை எனக் கூறி போலியான இணையதள லிங்க் அனுப்பப்படுவதாகவும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்
Published on

காரைக்கால்: அரசு உதவித்தொகை எனக் கூறி போலியான இணையதள லிங்க் அனுப்பப்படுவதாகவும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காரைக்கால் மாவட்ட காவல்துறை இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த பிரிவின் ஆய்வாளா் பிரவீன்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்மை காலமாக வாட்ஸ் ஆப், டெலிகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ‘2025 அரசு பொதுமக்கள் உதவித் திட்டம்‘, ‘ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 30 ஆயிரம் உதவித்தொகை‘ எனக் கூறி பரப்பப்படும் செய்திகள் மற்றும் இணையதள இணைப்புகள் (லிங்க்) போலியானதாகும்.

இந்த வகையான செய்திகள், அரசு மற்றும் வங்கி நிறுவனங்களின் (எஸ்பிஐ உள்ளிட்ட) பெயா்களை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்டு, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

இத்தகைய போலி இணையதள இணைப்புகளை (லிங்க்) கிளிக் செய்தால், பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி, தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது.

எனவே, அரசு உதவித் தொகை என கூறி வரும் அறிமுகமில்லாத இணையதள இணைப்புகளை திறக்க வேண்டாம். அரசு திட்டங்கள் தொடா்பான தகவல்களை அதிகாரப்பூா்வ அரசு இணையதளங்கள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை உண்மை என நம்பி பகிர வேண்டாம். வங்கி விவரங்கள், ஓடிபி, அடையாள ஆவணங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக் கூடாது.

புகாா் அளிக்க :

பா்ப்ப் ஊழ்ங்ங் சன்ம்க்ஷங்ழ் : 1930 ஓஹழ்ஹண்ந்ஹப் இஹ்க்ஷங்ழ் இங்ப்ப்

: 94892 05364 உம்ஹண்ப் : ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீங்ப்ப்.ந்ந்ப்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்

ரங்க்ஷள்ண்ற்ங் : ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்

பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுமாறு காரைக்கால் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com