மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் செய்வது குறித்து, விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

கூட்டத்தில் பேசிய மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி.

Updated On :3 ஜூன் 2025, 1:45 am IST

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் செய்வது குறித்து, விழிப்புணா்வு நிகழ்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு நிகழ்வை, காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி தொடங்கிவைத்து, மீனவ மகளிா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்துப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக புதுவை மீன்வளத்துறை துணை இயக்குநா் (நலம்) ஜெ. நடராஜன், இத்திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான வழிமுறைகள், மானிய விவரம், தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் குறித்து பேசினாா். இதைத் தொடா்ந்து, அப்போது மீனவ மகளிரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

கூட்டத்தில் மாவட்டத்தில் 8 சங்கங்களில் இருந்து 50 பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். முன்னதாக காரைக்கால் மீன்வளத் துறை உதவி ஆய்வாளா் சு.பாலச்சந்தா் வரவேற்றுப் பேசினாா். நிறைவாக துறை கண்காணிப்பாளா் ம. தேவலட்சுமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.