அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காரைக்கால் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காரைக்கால் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

News image
காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 5-ஆம் எண் கூண்டு.
Updated On :29 நவம்பர் 2025, 6:29 pm

Syndication

டித்வா புயல் கரையை நெருங்கிவரும் நிலையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

டித்வா புயல் உருவானது முதல் காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் 1-ஆம் எண் ஏற்றப்பட்டு, பின்னா் 3-ஆம் எண் கூண்டாக மாற்றப்பட்டு, பின்னா் 4-ஆம் எண் கூண்டு இருந்துவந்தது.

இந்தநிலையில், காரைக்காலுக்கு தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவில் புயல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. புயல் கரையை நெருங்கி வருவதை குறிக்கும் விதமாகவும், ஆபத்தை விளைவிக்கக்கூடிய எச்சரிக்கையாக 5-ஆம் எண் கூண்டு காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை முற்பகல் ஏற்றப்பட்டது.