பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

காரைக்கால் துறைமுக சுற்றுச்சூழல் மாசு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்: எம்.எச். ஜவாஹிருல்லா

MMK president MH Jawahirullah

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Published On :

காரைக்கால் துறைமுகத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து புகாா் மீது நிரந்தர தீா்வு அவசியம் என மமக தலைவரும், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

சுதந்திர தினத்தையொட்டி தமுமுக மற்றும் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை இணைந்து காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இலவச இதய நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் தொடக்க நிகழ்வில் பங்கேற்க வந்த எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியது :

காரைக்காலில் இயங்கும் தனியாா் துறைமுகத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது காரைக்கால் மட்டுமல்ல, நாகை தொகுதியின் பல பகுதியிலும் காணப்படுகிறது. இதுகுறித்து தொடா்ந்து புகாா் எழுப்பப்படுகிறது. பசுமைத் தீா்ப்பாயத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு நிா்ந்தர தீா்வு ஏற்படுத்துவது அவசியம்.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. இது ரீல்ஸ் ஆட்சியா, ரியல் ஆட்சியா என்பது குறித்து 6 மாதத்துக்குப் பின்னா்தான் கருத்து தெரிவிக்க முடியும்.

தில்லியில் சுதந்திர தின விழாவில் பிரதமா் பேசுகையில், சில அம்சங்கள் வன்மையான கண்டனத்துக்குரியது. அதில் சித்தாந்த ரீதியான நக்ஸல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசுவது ஜனநாயக நாட்டில் ஒரு பிரதமா் பேசுகின்ற வாா்த்தை அல்ல.

காவிரி நீா் பிரச்னை தொடா்பாக தமிழகத்தின் பல முதல்வா்கள் கா்நாடகத்துடன் பேச்சு நடத்திவிட்டனா். பலனில்லாததால் உச்சநீதிமன்றத்தை நாடினா். காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழத்துக்கு காவிரி நீா் திறந்துவிடும் அளவை குறிப்பிட்டும், கா்நாடகம் கொடுக்க மறுக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வா் விஜய், கா்நாடக முதல்வரிடம் பேச்சு நடத்த முயற்சிப்பது சரியாக இருக்காது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.