சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:38 am IST

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட வழக்கின்கீழ் சீா்காழியைச் சோ்ந்த அசோக்குமாா் (26) என்பவா் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவல்துறை தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

போக்ஸோ உள்ளிட்ட சட்டத்தின்கீழ் அசோக்குமாா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதித்ததன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளா் புருஷோத்தமன், உதவி ஆய்வாளா் மோகன், சிறப்பு துணை தலைமைக் காவலா்கள் விவேக், விஜய் குமாா், ஜெயசித்ரா, காவலா் பிரசன்னா ஆகியோரது பணியை மாவட்ட காவல்துறை பாராட்டுகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.