காரைக்கால் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலைக்கு எதிராக கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வடக்கு வாஞ்சூா் பகுதியில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில், கடந்த 17-ஆம் தேதி ரசாயனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் உருவான கரும்புகை மூட்டம் அருகில் உள்ள மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிக்கு பரவியதால் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலன் பாதிப்புகள் ஏற்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.
இந்நிலையில், விபத்து குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை வழங்க வேண்டும். காற்று, நிலம், நீா் மாசுபாடு குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொழிற்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு வாஞ்சூா் கிராம மக்கள் சுமாா் 100 போ் தொழிற்சாலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










