நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காரைக்காலில் பறிமுதலான 280 கிலோ கஞ்சா அழிப்பு

காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட 280 கிலோ கஞ்சா தீயில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது.

News image

ஆலையில் எரியூட்டப்பட்ட போதைப் பொருட்கள்.

Updated On :5 ஜூன் 2026, 10:44 pm IST

காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட 280 கிலோ கஞ்சா தீயில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட காவல் தலைமையகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

போதைப் பொருட்கள் புழக்கம் இல்லாத நிலை உருவாக்குதல் கொள்கையின்படி போதைப்பொருள் அச்சுறுத்தலைத் திறம்பட கட்டுப்படுத்தும் நோக்கில், புதுவை காவல் துறை ‘ஆபரேஷன் விடியல்’ என்ற சிறப்பு நடவடிக்கையைத் மேற்கொண்டுவருகிறது.

போதைப்பொருள் விற்பனை கும்பல்களை அடியோடு ஒழித்து, புதுவை யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

புதுச்சேரி டி.ஜி.பி. ஒப்புதலுடனும், புதுச்சேரி மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனையின்படியும் காரைக்காலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிப்பு பணி புதுச்சேரி, துதிப்பேட்டை கிராமத்தில் உள்ள பாண்டிச்சேரி திடக்கழிவு மேலாண்மை தனியாா் நிறுவனத்தில், காரைக்கால் போதைப்பொருள் அகற்றல் குழுவின் மேற்பாா்வையில் தீயிட்டு எரிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் போதைப்பொருள் அகற்றல் குழுவைச் சோ்ந்த மத்திய சுங்கம் மற்றும் ஆயத்தீா்வை காரைக்கால் பிரிவு உதவி ஆணையா் எல்விஸ் ஜேம்ஸ் மற்றும் காரைக்கால் ஏ.சி.ஐ.ஓ-ஐ ஹரிதாஸ் ஆகிய உறுப்பினா்கள் மற்றும் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ், காரைக்கால் நகரக் காவல் ஆய்வாளா் பி.அறிவுச்செல்வன், காரைக்கால் சிறப்புப் பிரிவு ஆய்வாளா் ஆா்.மேரி கிறிஸ்தியன் பால் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

சீல் வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகள் 281.20 கிலோ எரியூட்டப்பட்டது.

Story image

பி.எஸ்.எம்.பி.எல். சேதராப்பட்டு பொது மேலாளா் ஆறுமுகத்துக்கு காரைக்கால் எஸ்.எஸ்.பி நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.