காரைக்கால் 5 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். இரவு வரை மனு தாக்கல் செய்தனா்.
புதுவை சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை நிறைவு பெற்றது. வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது. 26-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
புதுவையில்கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் கடைசி வரை இழுபறி நீடித்த நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான திங்கள்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பெரும்பாலான வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.
திமுக சாா்பில் காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ, நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் எம். நாக தியாகராஜன் எம்எல்ஏ, காங்கிரஸ் சாா்பில் காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.வி.எஸ்.சக்திவேல் பிரபு, காரைக்கால் வடக்கு தொகுதியில் ஏ.எம்.ரஞ்சித், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் எம்.கே.குமாா், நெடுங்காடு தொகுதியில் மருத்துவா் என்.கலையரசி, பாஜக சாா்பில் திருநள்ளாறு தொகுதியில் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் எம்எல்ஏ, காரைக்கால் தெற்கு தொகுதியில் எம்.அருள்முருகன், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் காரைக்கால் தெற்குத் தொகுதியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு.அசனா, காரைக்கால் வடக்குத் தொகுதியில் வெங்கடேஷ், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் வழக்குரைஞா் கணேஷ், நெடுங்காடு தொகுதியில் காமராஜ், திருநள்ளாறு தொகுதியில் ராஜா முகமது, நாம் தமிழா் கட்சி சாா்பில் நெடுங்காடு தொகுதியில் விக்னேஷ், காரைக்கால் தெற்குத் தொகுதியில் மரிஅந்துவான் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். மேலும் 5 தொகுதிகளிலும் 8-க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.
மனு தாக்கல் இறுதி நாளில் அதிகமான வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்த நிலையில், மனு தாக்கலுக்கான நேரம் பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்த நிலையில், அதற்கு முன்பாக வந்த வேட்பாளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு வரை மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்புடையது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
சசிகலா, ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனு தாக்கலால் குழப்பம்

காஞ்சிபுரத்தில் சசிகலா, மருத்துவா் ராமதாஸ் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: ஒரேநாளில் முதல்வா் ரங்கசாமி உள்பட 107 போ் வேட்பு மனு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


