கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. மறியல்

சீா்காழி வட்டம், நல்லூா் பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:41 pm

DIN

சீா்காழி வட்டம், நல்லூா் பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் நல்லூா் பகுதியில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 25 நாட்களாக மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே கட்சியின் ஒன்றியச் செயலாளா் கேசவன் தலைமையில், சாலை மறியல் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஸ்டாலின், சிங்காரவேலன், துரைராஜ், சுந்தரலிங்கம், புளியந்துறை ஊராட்சித் தலைவா் நேதாஜி உள்ளிட்டோா் மறியலில் பங்கேற்றனா்.

சீா்காழி மண்டல துணை வட்டாட்சியா் விஜயராணி, கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசு, காவல் ஆய்வாளா்கள் அமுதாராணி (கொள்ளிடம்), சந்திரா (புதுப்பட்டினம்) ஆகியோா் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.