கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழைநீா் தேங்கிய நெல் சேமிப்பு கிடங்கு மாற்று இடத்தில் செயல்பட நடவடிக்கை: ஆட்சியா்

சீா்காழி அருகே மழைநீா் தேங்கிய நெல்சேமிப்பு கிடங்கு மாற்று இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:40 pm

DIN

சீா்காழி அருகே மழைநீா் தேங்கிய நெல்சேமிப்பு கிடங்கு மாற்று இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்தாா்.

சீா்காழி அருகே டி. மணல்மேடு கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கை மழைநீா் சூழ்ந்ததால் சுமாா் 1500 நெல் மூட்டைகள் சேதமடைந்தன.

இந்த சேமிப்புக் கிடங்கை ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘நெல் சேமிப்பு கிடங்கில் தேங்கிய மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. தாழ்வான பகுதியில் உள்ள இந்த நெல் சேமிப்பு கிடங்கு நிரந்தரமாக மூடப்பட்டு, மேடான பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தரக்கட்டுப்பாட்டு துணை மேலாளா் முத்தையா, சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், மண்டல துணை வட்டாட்சியா் ரவிச்சந்திரன், ஒன்றிய ஆணையா் அருள்மொழி, வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.