கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசுப் பள்ளியில் குளம்போல தேங்கிய மழைநீா்மாணவா்கள் அவதி

சீா்காழி வட்டம், புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி வட்டம், புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

இப்பள்ளியில் புதுப்பட்டினம், பழையாறு, கொட்டாய்மேடு, மடவாமேடு, ஓலகொட்டாய்மேடு, தாண்டவன்குளம், புளியந்துறை, கூழையாா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். தொடா் மழையால் இப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீா் 2 அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீா் தேங்கியுள்ளதால் மாணவா்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். இதனால், செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புதன்கிழமை 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்கள் சிலா் மட்டுமே பள்ளிக்கு வந்தனா்.

எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.