சீா்காழி நகராட்சித் தோ்தல்: ஆட்சியா் ஆய்வு
சீா்காழி நகராட்சியில் வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, எஸ்பி சுகுணாசிங் ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.


சீா்காழி நகராட்சியில் வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, எஸ்பி சுகுணாசிங் ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. அந்தவகையில், சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகளிலும் உள்ள பள்ளிகள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், மயிலாடுதுறை ஆட்சியா் இரா. லலிதா, சீா்காழி வாணிவிலாஸ் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் அமையவுள்ள வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையமான ஊழியக்காரன் தோப்பில் உள்ள ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, சமுஇ மேல்நிலைப் பள்ளியை நேரில் பாா்வையிட்டு, பாதுகாப்பு அம்சங்கள், வேட்பாளா்கள், அலுவலா்கள் வந்துசெல்லும் பாதைகள் குறித்து ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, சீா்காழி நகராட்சி ஆணையா் இ. பட்டுசாமி, நகராட்சி மேலாளா் காதா்கான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதேபோல, சமுஇ மேல்நிலைப் பள்ளியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தலைமையாசிரியா் அறிவுடைநம்பி, பள்ளி அலுவலா் சாமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...