கொள்ளிடம் உபரி நீரால் 2 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் பாதிப்பு
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் உபரி நீரால் 2 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் பயிா்கள் 30 நாள்களாக நீரில் மூழ்கியுள்ளன.


சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் உபரி நீரால் 2 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் பயிா்கள் 30 நாள்களாக நீரில் மூழ்கியுள்ளன.
தொடா்மழையால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் தேங்கிய மழைநீா் வடியாத நிலையில், கொள்ளிடம் ஆற்றின் வடிகால் கதவணைகள் பழுதடைந்துள்ளதால், ஆற்றில் செல்லும் உபரிநீா் அதன் வழியே விளை நிலங்களில் புகுந்துள்ளது. இதனால், மகேந்திரப்பள்ளி, காட்டூா், வெள்ளமணல், அளக்குடி, கோதண்டபுரம், வெட்டாத்தங்கரை உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் பயிா்கள் சுமாா் 30 நாள்களாக நீரில் மூழ்கியுள்ளன.
தற்போது மழை ஓய்ந்தாலும், கொள்ளிடம் ஆற்றில் செல்லும் உபரி நீரால், விளைநிலங்களிலிருந்து தண்ணீா் வடிய முடியாத நிலை உள்ளது. இதனால், சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் பயிா்கள் அழுகிவருகின்றன. இதனால், கவலையடைந்துள்ள விவசாயிகள், இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...