‘மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்’
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது


மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் 11.35 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் மழைக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சுமாா் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிா்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால், பல்வேறு சிரமங்களுக்கிடையே விவசாயத்தை மட்டுமே நம்பி கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனா். எனவே, மழைப் பாதிப்புகளை முறையாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், பயிா்க்காப்பீடு செய்ய அரசு அறிவித்துள்ள நவ.15-ஆம் தேதி காலக்கெடுவை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...