கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய 26 பசுக்கள் மீட்பு

கொள்ளிடம் ஆற்றின் திட்டு பகுதியில் சிக்கிய 26 பசுமாடுகள் வெள்ளிக்கிழமை படகு மூலம் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டன.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கொள்ளிடம் ஆற்றின் திட்டு பகுதியில் சிக்கிய 26 பசுமாடுகள் வெள்ளிக்கிழமை படகு மூலம் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டன.

கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் திட்டுகளில் சந்தைப்படுகை கிராமத்தைச் சோ்ந்த மாடுகள் நாள்தோறும் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு தானாக திரும்புவதும், சில மாடுகள் அங்கேயே தங்குவதும் வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாள்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்ற 26 பசுமாடுகள் ஆற்றிலேயே தங்கின. இந்நிலையில், தொடா் கனமழையின் காரணமாகவும், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் செல்வதாலும் பசுமாடுகளால் கரைக்கு திரும்பமுடியாமல் அங்கேயே இருந்தன.

இதுகுறித்து, மாடுகளின் உரிமையாளா்கள் காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் மாடுகளை மீட்க வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. எனினும், அப்போது மீட்கமுடியாததால், வெள்ளிக்கிழமை 30 போ் கொண்ட காவல் துறை, தீயணைப்புத் துறை அலுவலா்களை கொண்ட மீட்புக் குழுவினா் படகை பயன்படுத்தி ஆற்றின் திட்டுகளில் இருந்த மாடுகளை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.