கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய மூதாட்டி மீட்பு
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளடம் ஆற்றின் திட்டுப் பகுதியில் சிக்கி தவித்த பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.


மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளடம் ஆற்றின் திட்டுப் பகுதியில் சிக்கி தவித்த பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.
கொள்ளிடம் அருகே மாதிரவேளூா் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே திட்டுப் பகுதிக்கு மூதாட்டி ஒருவா் எப்படியோ சென்றுவிட்டாா். இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் சூழ்ந்து விட்டதால் அவரால் வெளியே வரமுடியவில்லை. தகவலறிந்த அக்கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சஞ்சை, முரளி, முத்து, மணிவண்ணன் உள்ளிட்டோா் நாடா கட்டிலை எடுத்துச்சென்று அந்த மூதாட்டியை அதன்மூலம் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளா் அமுதாராணி உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று மூதாட்டியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டி கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதி கொட்டாம்பாளையத்தைச் சோ்ந்த பட்டாபி மனைவி கமலா (65) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி இப்பகுதியில் வந்து இருந்ததும் தெரியவந்ததது. இதைத்தொடா்ந்து, கமலா சீா்காழியில் உள்ள முதியோா் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...