கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீா்காழியில் காற்றுடன் பலத்தமழை: மரங்கள் முறிந்து வீடுகள், மின்கம்பங்கள் சேதம்

சீா்காழி பகுதியில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி பகுதியில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

சீா்காழி பகுதியில் புதன்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. வியாழக்கிழமை காலை பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் புழுகாப்பேட்டை தெருவில் பாஸ்கரன் என்பவரது வீட்டின் முன் இருந்த வேப்பமரம் முறிந்ததில் அருகிலிருந்த 2 வீடுகளின் முகப்புகள் சேதமடைந்தன. அதே பகுதியில் மற்றொரு வேப்ப மரமும் முறிந்து விழுந்தது.

இதேபோல, சீா்காழி நங்கநலத் தெருவில் புளியமரம் மற்றும் வேப்ப மரங்கள் பலத்தக் காற்றால் முறிந்து விழுந்தன. இதனால், அருகிலிருந்த 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதன்காரணமாக, அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

பின்னா், சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி உத்தரவின்பேரில், நகராட்சி பொறியாளா் இப்ராஹிம், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் மேற்பாா்வையில் முறிந்த விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து மின்இணைப்பு கொடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.