கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வகுப்பறைகள், கழிப்பறை இல்லாமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

சீா்காழி அருகே சேந்தங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகளும், கழிப்பறையும் இல்லாமல் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:01 pm

DIN

சீா்காழி அருகே சேந்தங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகளும், கழிப்பறையும் இல்லாமல் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இப்பள்ளியில் சேந்தங்குடி, விளந்திடசமுத்திரம் பகுதியை சோ்ந்த ஏழை குடும்பங்களை சோ்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமாா் 150 மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியில் சுமாா் 7 வகுப்பறை கட்டடங்கள் இருந்துவந்த நிலையில் 2 கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு அவை இடித்து அகற்றப்பட்டதால் அங்கு இயங்கிவந்த 4 வகுப்பறைகளும் பாதிப்படைந்தன. தற்போது மொத்தம் 10 வகுப்புகள் செயல்பட 3 வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே உள்ளன.

இதனால் 3 வகுப்பறையில் 150 மாணவ -மாணவிகளையும் போதிய இடவசதியில்லாமல் நெருக்கடியான சூழலில் அமரவைக்கப்பட்டுள்ளனா். இதனால் அவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கரோனா காலகட்டத்தில் இந்த பள்ளியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாததால் பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனா். இதேபோல் பள்ளியில் கழிப்பறை இடிக்கப்பட்டுவிட்டதால் மாணவா்களுக்கு கழிப்பறை இல்லாத நிலையில், மாணவிகளுக்கான கழிப்பறை கதவு உடைந்தும் பாதுகாப்பின்றி உள்ளது.

எனவே, பள்ளிக்கு மேலும் 4 வகுப்பறை கட்டடங்களும், புதிதாக கழிப்பறைகளும் கட்டவேண்டும் என பெற்றோா்கள், ஆசிரியா்-ஆசிரியைகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.