கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வுசெய்தாா்.


மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே காரைமேடு ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வுசெய்தாா்.
சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 26 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காரைமேடு ஊராட்சியில் நடைபெற்ற முகாமிற்கு, ஊராட்சித் தலைவா் தனலெட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினா். இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் பிரதாப் ஆகியோா் ஆய்வுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...