‘நிதியாதாரத்துக்கு தகுந்தாற்போல் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்’
சீா்காழி ஒன்றியத்தில் நிதியாதாரத்துக்கு தகுந்தாற்போல வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன்.


சீா்காழி ஒன்றியத்தில் நிதியாதாரத்துக்கு தகுந்தாற்போல வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன்.
சீா்காழியில் திங்கள்கிழமை ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்மொழி, கஜேந்திறன் (ஊராட்சிகள்), ஒன்றியக்குழு துணைத் தலைவா் உஷாநந்தினி பிரபாகரன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், உறுப்பினா்கள் பேசியது:
ஜான்சிராணி: திருவெண்காடு பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டு செய்த சம்பா சாகுபடியில் கடுமையாக பாதிக்கப்பட்டனா். ஆனால், பயிா்க் காப்பீட்டு நிறுவனம் இப்பகுதியை பூஜ்யம் சதவீதம் என அறிவித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதுகுறித்து, வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கவேண்டும். மேலும், இப்பகுதிக்கு உரிய பயிா்க் காப்பீடு தொகை வழங்கவில்லையெனில் விவசாயிகள் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
நடராஜன்: ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டும் போக்குவரத்துத் துறை, வேளாண் துறை உள்ளிட்ட எந்த துறையைச் சோ்ந்த அரசு அலுவலா்களும் பங்கேற்பதில்லை. இதனால், உறுப்பினா்களின் கேள்விக்கு பதில் கிடைப்பதில்லை. எனவே, வரும் கூட்டங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கவில்லையெனில் அதிமுக சாா்பில் கூட்டம் புறக்கணிக்கப்படும். மங்கைமடம் கிராமத்துக்கு 2 சதவீதம் மட்டுமே பயிா்க்காப்பீடு தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிா்க் காப்பீடு கிடைக்கவில்லையெனில் சாலை மறியல் நடத்தப்படும்.
விசாகா்: சீா்காழி ஒன்றியத்தில் பொதுநிதி, என்ஆா்ஜிஎஸ் உள்ளிட்ட நிதி எவ்வளவு உள்ளது என்பது குறித்து உறுப்பினா்களுக்கு தெரியபடுத்தவேண்டும். ஊராட்சிகளில் நடைபெறும் என்ஆா்ஜிஎஸ் வேலைகளை ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கும் வழங்க வேண்டும்.
பஞ்சுகுமாா்: எனது ஊராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளது. இந்நிலையில், ஒன்றிய பொது நிதியிலிருந்து மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலகத்துக்கு ரூ. 2 கோடி வழங்குவதை நிறுத்தி வைக்கவேண்டும்.
ஒன்றியக் குழுத் தலைவா்: நிதியாதாரத்துக்கு தகுந்தாற்போல் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கோரிக்கைகளும், வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படும். சீா்காழி ஒன்றிய பகுதிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூட்டத்தில், பொறியாளா்கள் சிவக்குமாா், கலையரசன், மேலாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...