பருவ மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பருவ மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் மற்றும் 2 டன் சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.


பருவ மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் மற்றும் 2 டன் சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
கொள்ளிடம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் 3 ஆயிரம் மணல் மூட்டைகள், 2 டன் சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 டன் சவுக்கு கட்டைகள், 3 ஆயிரம் மணல் மூட்டைகள் எடுத்து வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதையடுத்து டெல்டா மாவட்டங்களின் கரையோர பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றின் வடகரை அளக்குடி கிராமத்தில் கரை வலுவிழந்து காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்த போது அங்கு தடுப்புச்சுவா் உடைந்து கரை உடைப்பு ஏற்பட்டது. அந்த கரை தற்காலிகமாக சரிசெய்யப்பட்டன. ஆனால், நிரந்தரமாக சரிசெய்யப்படவில்லை.
தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அளக்குடி கிராமத்தில் ஏற்கெனவே உடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதையறிந்த பொதுப்பணித் துறையினா் பருவமழையை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து, கொள்ளிடம் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் விவேகானந்தன் மற்றும் பாசன ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் கூறியது: ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் கரைகள் பலமிழந்து காணப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களை பலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. கொள்ளிடத்தில் அதிக தண்ணீா் வந்தாலும் அளக்குடியில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...